/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்? சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்? ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்? சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்?
ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்? சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்?
ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்? சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்?
ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்? சுயநிதிப் பாடப்பிரிவுகள் செயல்படுவதில் சிக்கல்?
ADDED : ஜூன் 27, 2024 11:03 PM
திருப்பூர் : தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மகேஷ் ஆகியோருக்கு பெற்றோர் ஆசிரியர் கழக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் அனுப்பிய மனு:
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலைக்கல்வியில், 17 பாடப்பிரிவுகள் உள்ளன. 2,500 மாணவியர் படிக்கின்றனர். மொத்தம் உள்ள 17 பாடப்பிரிவுகளில், ஆறு பாடப்பிரிவுகள் சுயநிதி முறையில் இயங்கி வருகிறது.
பெற்றோரின் விருப்ப நன்கொடை மூலம், சுயநிதி வகுப்புக்கு ஆசிரியருக்கு ஊதியம், பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் வழங்கி வந்தது. கடந்த, 2021ல் அரசு பிறப்பித்த,'அரசுப் பள்ளிகளில் எவ்விதமான நன்கொடைகளும் வாங்கக்கூடாது,' என்ற உத்தரவால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, சுயநிதிப்பிரிவில் பாடம் நடத்தும், 24 ஆசிரியர், பிற காலிப்பணியிடத்தில் உள்ள, 20 ஆசிரியர் என மொத்தம், 44 ஆசிரியர்களுக்கும் மாதந்தோறும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. சுயநிதிப்பிரிவில் பயிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
சுயநிதிப்பிரிவில் கல்வி பயிலும் மாணவிகளின் பெற்றோர்களிடம் உரிய முறையில் நன்கொடை பெற்று, கடந்த காலங்களில் சிறப்பாக நடத்தியது போல், மீண்டும் வகுப்புகளை நடத்த, பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கோ அல்லது பள்ளியின் மேலாண்மைக் குழுவுக்கோ அரசு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ''மாநகராட்சி மூலமும், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் மூலமும் உதவிகள் பெறப்பட்டு, சிறப்பு பாட வகுப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது'' என்றனர்.