/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முன் கற்றல் அடிப்படை பயிற்சி துவக்க விழா முன் கற்றல் அடிப்படை பயிற்சி துவக்க விழா
முன் கற்றல் அடிப்படை பயிற்சி துவக்க விழா
முன் கற்றல் அடிப்படை பயிற்சி துவக்க விழா
முன் கற்றல் அடிப்படை பயிற்சி துவக்க விழா
ADDED : ஜூலை 16, 2024 01:39 AM

அவிநாசி:'நீட்', 'ஜேஇஇ', 'ஐஐடி' ஆகியவற்றுக்கான பரிஹா முன் கற்றல் அடிப்படைப் பயிற்சி வகுப்பிற்கான துவக்க விழா அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்றது.
இதில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் ஆரம்பத்திலேயே அனைத்து போட்டித் தேர்வுகளையும் எதிர்கொண்டு, தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை பப்ளிக் பள்ளி தாளாளர் டாக்டர் நிர்மலா பங்கேற்று, போட்டித் தேர்வுக்கு தயாராவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். பயிற்சியாளர்களான டாக்டர். லோகேஷ், ஆனந்தி ஆகியோர் முன் அடிப்படை பயிற்சிக் கல்வி பற்றி விரிவாக மாணவர்களுக்கு செயல்முறைக் கல்வி குறித்து விளக்கினர்.
பள்ளியின் தாளாளர் ராஜ்குமார், செயலர் மாதேஸ்வரி ராஜ்குமார் மற்றும் பழனியப்பா பள்ளி கல்வி இயக்குனர் டாக்டர் சதீஷ்குமார், பள்ளி முதல்வர் வித்யாசங்கர் ஆகியோர் பங்கேற்று பரிஹா குழுவினரைப் பாராட்டினர்.