/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரோட்டில் கிடந்த ரூ.ஒரு லட்சம்; போலீசில் ஒப்படைத்த நேர்மையான நடத்துநருக்கு பாராட்டுரோட்டில் கிடந்த ரூ.ஒரு லட்சம்; போலீசில் ஒப்படைத்த நேர்மையான நடத்துநருக்கு பாராட்டு
ரோட்டில் கிடந்த ரூ.ஒரு லட்சம்; போலீசில் ஒப்படைத்த நேர்மையான நடத்துநருக்கு பாராட்டு
ரோட்டில் கிடந்த ரூ.ஒரு லட்சம்; போலீசில் ஒப்படைத்த நேர்மையான நடத்துநருக்கு பாராட்டு
ரோட்டில் கிடந்த ரூ.ஒரு லட்சம்; போலீசில் ஒப்படைத்த நேர்மையான நடத்துநருக்கு பாராட்டு
UPDATED : மார் 14, 2025 06:19 AM
ADDED : மார் 14, 2025 01:18 AM

திருப்பூர் : தாராபுரத்தில், நள்ளிரவில் ரோட்டில் கிடந்த பையில் இருந்த, ஒரு லட்சத்து, 2 ஆயிரம் ரூபாயை, அரசு பஸ் நடத்துனர் போலீசில் ஒப்படைத்தார். அப்பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - வசந்தம் நகரை சேர்ந்தவர் சையது அப்துல் ஹக்கீம், 44. தாராபுரம் கிளை அரசு பஸ் நடத்துனர். நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து பைக்கில் நள்ளிரவு வீடு திரும்பினார். பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள மேம்பாலம் மீது சென்ற போது, ரோட்டில் ஒரு பை கிடந்தது.
அதனை, எடுத்து பார்த்தில், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 100 ரூபாய் பணம் இருந்தது.உடனடியாக பணம் இருந்த பையை தாராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், திருப்பூர் அங்கேரிபாளையம், செல்வலட்சுமி நகரைச் சேர்ந்த கலையரசி, 35 என்பவர் அந்த பையைத் தவறவிட்டது தெரிந்தது.
அவரது தம்பி குருசாமியை வரவழைத்த போலீசார் அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். நள்ளிரவில் கண்டெடுத்த பணப்பையை போலீசில் ஒப்படைத்து அதை உரியவரிடம் ஒப்படைக்கும் வகையில் நேர்மையுடன் செயல்பட்ட நடத்துனர் சையது அப்துல் ஹக்கீமை பலரும் பாராட்டினர்.