/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிரதோஷ வழிபாடு; சிவனடியார்கள் பரவசம் பிரதோஷ வழிபாடு; சிவனடியார்கள் பரவசம்
பிரதோஷ வழிபாடு; சிவனடியார்கள் பரவசம்
பிரதோஷ வழிபாடு; சிவனடியார்கள் பரவசம்
பிரதோஷ வழிபாடு; சிவனடியார்கள் பரவசம்
ADDED : மார் 12, 2025 12:27 AM

திருப்பூர்; திருப்பூர் வட்டார சிவாலயங்களில் நேற்று, மாசி மாதம் வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.
மாசி மாத வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு, திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி, நந்தியம் பெருமானுக்கு பல திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும், நேற்று பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேலும், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை கைலாசநாதர் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் - சொக்கநாதர் சன்னதி, உள்ளிட்ட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.