/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரும் 6ம் தேதி முதல் 7 சதவீத கூலி உயர்வு ;பவர் டேபிள் சங்கம் நினைவூட்டல் வரும் 6ம் தேதி முதல் 7 சதவீத கூலி உயர்வு ;பவர் டேபிள் சங்கம் நினைவூட்டல்
வரும் 6ம் தேதி முதல் 7 சதவீத கூலி உயர்வு ;பவர் டேபிள் சங்கம் நினைவூட்டல்
வரும் 6ம் தேதி முதல் 7 சதவீத கூலி உயர்வு ;பவர் டேபிள் சங்கம் நினைவூட்டல்
வரும் 6ம் தேதி முதல் 7 சதவீத கூலி உயர்வு ;பவர் டேபிள் சங்கம் நினைவூட்டல்
ADDED : ஜூன் 04, 2024 12:56 AM

திருப்பூர்:கடந்த, 2022 ஒப்பந்தப்படி, 6ம் தேதி முதல் 7 சதவீத கட்டண உயர்வு வழங்க வேண் டுமென, பவர் டேபிள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு பனியன் உற்பத்தியில், 'ஜாப் ஒர்க்' முறையில் பனியன் மற்றும் ஜட்டிகள் தயாரித்து கொடுக்கும், பவர் டேபிள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. திருப்பூரில் மட்டும் 1,700 பவர் டேபிள் நிறுவனங்கள் உள்ளன.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்து, அதன்படி பவர்டேபிள் நிறுவனங்களுக்கு கட்டணம் வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, 2022ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தி, ஜூன் மாதம் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. நடைமுறையில் இருந்த சம்பளத்தில் இருந்து, 17 சதவீதம் உயர்த்தப்பட்டது. அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு, (2025 ஜூன் வரை), தலா, 7 சதவீத கட்டண உயர்வு வழங்குவதாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
கடந்த, 2022 கட்டண உயர்வு ஒப்பந்தப்படி, வரும் 6ம் தேதி முதல், நடைமுறை கட்டணத்தில் இருந்து, 7 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.