/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதுகலை பட்டப்படிப்பு ஆக., 8 வரை அவகாசம் முதுகலை பட்டப்படிப்பு ஆக., 8 வரை அவகாசம்
முதுகலை பட்டப்படிப்பு ஆக., 8 வரை அவகாசம்
முதுகலை பட்டப்படிப்பு ஆக., 8 வரை அவகாசம்
முதுகலை பட்டப்படிப்பு ஆக., 8 வரை அவகாசம்
ADDED : ஜூலை 28, 2024 12:12 AM
திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் அறிக்கை:
நடப்பு 2024 - 2025ம் கல்வியாண்டுக்கான முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, www.thgasa.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கல்லுாரியில், எம்.ஏ., தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியியல், எம்.காம்., எம்.காம்.,(சர்வதேச வணிகம்), எம்.எஸ்ஸி., (கணிணி அறிவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், ஆடை வடிவமைப்பு மற்றும் நாகரிகம் ஆகிய முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளது.
விண்ணப்ப கட்டணம், 60 ரூபாய். நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் விண்ணப்பக்கட்டணத்தை செலுத்த முடியும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இளநிலை கணிதம் பயின்றவர்கள் முதுநிலை கணினி அறிவியல் பட்ட படிப்பிலும், முதுநிலை ஆங்கிலம் அல்லது தமிழ் இலக்கிய வகுப்பில் சேர விரும்புபவர்கள் நான்கு பருவங்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பயின்றவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக., 8ம் தேதி. கல்லுாரியின் இணையதள பக்கத்தில் ஆக., 10ம் தேதி தரிவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். ஆக., 14ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், ஆக., 19ம் தேதி பொதுப்பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடக்கும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.