Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.15 கோடி முதலீட்டில் 'பி.எல்.ஐ., - 2.0' திட்டம்: மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ரூ.15 கோடி முதலீட்டில் 'பி.எல்.ஐ., - 2.0' திட்டம்: மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ரூ.15 கோடி முதலீட்டில் 'பி.எல்.ஐ., - 2.0' திட்டம்: மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ரூ.15 கோடி முதலீட்டில் 'பி.எல்.ஐ., - 2.0' திட்டம்: மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 21, 2024 11:08 AM


Google News
திருப்பூர்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்படும் வகையில், 15 கோடி ரூபாய் முதலீட்டுடன் கூடிய, பி.எல்.ஐ., -2.0' திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டின் ஏறறுமதி சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.,) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலமாக, விற்பனையை மேம்படுத்த, ஊக்கத்தொகை வழங்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது.

ஆட்டோமொபைல்ஸ், மருந்து, செயற்கை நுாலிழை ஜவுளி என, 14 வகையான உற்பத்தி இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்திக்கு மட்டும் இருந்த இத்திட்டம், பருத்தி ஆடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக, இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லை. அதிகபட்ச முதலீடு செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. இதனால், தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே தொழில்துறையினர் பயனடைந்தனர்.

முதற்கட்டமாக, 100 கோடி ரூபாய் முதலீடு செய்தால், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில், 300 கோடி ரூபாய் 'டர்ன் ஓவர்' இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், திருப்பூர் பின்னலாடை தொழில்துறைக்கு இத்திட்டம் நேரடியாக பயனளிக்கவில்லை.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரும், பி.எல்.ஐ., திட்டத்தின் மூலமாக, 'கிரீன் திருப்பூர்', 'பிராண்ட் திருப்பூர்' என, புதிய பிராண்ட்களை உருவாக்க திட்டமிட்டனர். இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து சரியான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக முடிந்தது.

வரும் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும், மத்திய பட்ஜெட்டில், பி.எல்.ஐ., -2.0 ' திட்டம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கும் தொழில்துறையினர் காத்திருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us