Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 2 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

2 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

2 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

2 ஆயிரம் மரக்கன்று நடும் பணி துவக்கம்

ADDED : ஜூன் 02, 2024 01:13 AM


Google News
Latest Tamil News
அவிநாசி:அவிநாசி ஒன்றியத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சாலையோர இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை அவிநாசி நெடுஞ்சாலைத்துறையினர் துவங்கியுள்ளனர்.

கடந்த இரு வாரம் முன், அவிநாசியில் வீசிய சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக நகர் பகுதியில் மட்டும், 42 மரங்கள் வேருடன் சாய்ந்தது.

பல மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால், பாதசாரிகள், டூவீலர்களில் செல்பவர்கள் நிழலுக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

வெப்பத்தை தணிப்பதற்கு, சாலையோரங்களில் பசுமை தரக்கூடிய மரங்களாகவும் பறவைகளுக்கு உணவளிக்கும் பழ வகைகள் கொண்ட மரங்களையும் நடுவதற்கான முயற்சியில் அவிநாசி நெடுஞ்சாலைத்துறையினர் களம் இறங்கினர்.

முதல் கட்டமாக அவிநாசி - மங்கலம் சாலையில், நெடுஞ்சாலைத் துறையினருக்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

அவிநாசி உதவி கோட்ட பொறியாளர் கணேசன் கூறியதாவது:

பசுமை காடுகள் வளர்க்கும் விதமாக முதல் கட்டமாக அவிநாசியில் இருந்து மங்கலம் ரோட்டில், 300 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.

அதேபோல சேவூர் செல்லும் சாலையில், 200, சேவூர் - புளியம்பட்டி சாலையில், 250, சேவூர் - நம்பியூர் சாலையில் மாவட்ட எல்லையான மொட்டணம் பகுதி வரை 800 மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது.

இதில் புங்கன், நாவல், மகிழம், வேம்பு போன்ற வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை கால்நடைகள் உண்ணாமல் பாதுகாக்க சுற்றிலும் கம்புகள் அமைத்து பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். தற்போது பருவ மழை பெய்ய துவங்கியுள்ளதாலும், வெப்ப சலனத்தால் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் மரக்கன்றுகளை நட துவங்கியுள்ளோம்.

மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களில் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகிய வற்றில் இருந்து மரங்களை வளர்க்க போதுமான தண்ணீர் பாய்ச்சவும் கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us