Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மருத்துவர் சேவை; காலம் முழுக்க தேவை  

மருத்துவர் சேவை; காலம் முழுக்க தேவை  

மருத்துவர் சேவை; காலம் முழுக்க தேவை  

மருத்துவர் சேவை; காலம் முழுக்க தேவை  

ADDED : ஜூன் 30, 2024 09:00 PM


Google News
சமூகம் மற்றும் தனிமனிதருக்கு டாக்டர்கள் செய்யும் சேவையை அங்கீகரிக்க தேசிய டாக்டர் தினம் கொண்டாடப்படுகிறது. 1991 ல் மேற்கு வங்கத்தின் முதல்வராக இருந்த டாக்டர் பிதான்சந்திரராய் (பி.சி.,ராய்) நினைவாக இந்த தினம் இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது.

இக்கட்டான சூழலில் உள்ள ஒருவரின் உயிர் காக்கும் பணியை செய்வதால், கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார்கள், டாக்டர்கள். கடந்த சென்ற, நாம் மறக்க நினைக்கு கொரோனா காலத்தில் இவர்களது பணி அளப்பரியது. அவரவர் உயிரை பணயம் வைத்து, நம்மில் பலரை காக்க போராடினர். முழு கவச உடை அணிந்தவர்களே பார்த்தே பயந்து தள்ளி நின்ற நிலையில், நாள் முழுதும் அந்த உடையில் இருந்து, பணியாற்றி, எப்போது முககவசத்தை கழற்றுவோம் என பெருமூச்சு விட்டவர்கள்.

உடலில் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால், நாம் முதலில் நாடிச் செல்வது டாக்டரை தான். நேரம், காலம் பார்க்காமல் சேவை செய்வது தான் இவர்களின் பணி. இவர்களது சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், டாக்டர்கள் மருத்துவத் துறைக்கு செய்யும் அர்ப்பணிப்பை நினைவு படுத்திக் கொள்ளும் வகையிலும் ஜூலை 1ம் தேதி, டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

ஏன் ஜூலை 1?

மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவி வகித்தவர் டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த அனைத்து துறைகளிலும் பிறருக்கு முன்மாதிரியாக திகழ்ந்து, பாரத ரத்னா விருது பெற்றவர். இவரது சேவையை கவுரவிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் தேசிய டாக்டர்கள் தினமாக ஜூலை, 1ல் கொண்டாடப்படுகிறது.

மருத்துவம் என்பது தொழில் அல்ல, அது ஒரு சேவை. சேவையை விட ஊழியம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஒவ்வொரு மருத்துவரும் ஆஸ்பத்திரியை கோவிலாக நினைத்து பணியாற்றுகின்றனர். நாமும், மருத்துவமனையை கோவிலாக எண்ணி, அதனை துாய்மை வைத்தால், சுகாதாரம் சிறக்கும்; நோய்களும் நம்மை அண்டாது.

- இன்று(ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us