ADDED : ஜூன் 23, 2024 11:34 PM
உடுமலை;திருப்பூர் மாவட்டத்திலுள்ள, ஒன்பது தாலுகாகளிலும் முதல் நாளில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,572 மனுக்கள் பெறப்பட்டன.
இரண்டாவது நாளான நேற்று, திருப்பூர் வடக்கு தாலுகாவில் 93; திருப்பூர் தெற்கு தாலுகாவில் 108; ஊத்துக்குளியில் 332; அவிநாசியில் 229; பல்லடத்தில் 57; தாராபுரத்தில் 173; காங்கயத்தில் 256; உடுமலையில் 216; மடத்துக்குளத்தில் 294 என, மொத்தம் 1,758 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இரண்டு நாள் ஜமாபந்தியில், இதுவரை மொத்தம் 3,330 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு மற்றும் ஊத்துக்குளி, மடத்துக்குளம் தாலுகாகளில் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவடைந்தது.
திருப்பூர் வடக்கு தாலுகாவில், இரண்டு நாள் ஜமாபந்தியில், மொத்தம் 147 மனுக்கள் பெறப்பட்டு, 72 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.
இன்று (24ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அதனால், மூன்று நாட்களுக்கு ஜமாபந்தி நடைபெறாது.
திருப்பூர் தெற்கு தாலுகாவில் வரும் 25ம் தேதியுடன் ஜமாபந்தி நிறைவடைகிறது; பல்லடம், அவிநாசி, காங்கயம் தாலுகாக்களில், 25, 26ம் தேதியுடனும், தாராபுரம், உடுமலையில் 25, 26, 27ம் தேதியுடனும் ஜமாபந்தி நிறைவு பெறுகிறது.