/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மனமகிழ் மன்றத்தை அகற்ற வணிகர் சங்கம் சார்பில் மனுமனமகிழ் மன்றத்தை அகற்ற வணிகர் சங்கம் சார்பில் மனு
மனமகிழ் மன்றத்தை அகற்ற வணிகர் சங்கம் சார்பில் மனு
மனமகிழ் மன்றத்தை அகற்ற வணிகர் சங்கம் சார்பில் மனு
மனமகிழ் மன்றத்தை அகற்ற வணிகர் சங்கம் சார்பில் மனு
ADDED : ஜூலை 19, 2024 12:53 AM

அவிநாசி;அவிநாசி, சேவூர் ரோட்டில் சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில், 12ம் தேதி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான கூடம் திறக்கப்பட்டது.
மதுபான கூடத்தை அகற்ற வலியுறுத்தி, அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் சார்பில், தாசில்தார் மோகனனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், பொதுமக்களுக்கு பல்வேறு விதத்திலும் இடையூறு ஏற்படுத்தும் தனியார் மனமகிழ் மன்றத்தின் பெயரில் உள்ள மதுபான கூடத்தை அகற்ற வேண்டும். இல்லாவிடில், வணிகர் சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சேர்ந்து ஆர்ப்பாட்டம், முற்றுகை, கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.
எனவே, பொதுமக்கள், பெண்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக மதுபான கூடத்தை அப்புறப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.