/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிராமங்களில் மா.கம்யூ., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கிராமங்களில் மா.கம்யூ., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கிராமங்களில் மா.கம்யூ., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கிராமங்களில் மா.கம்யூ., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கிராமங்களில் மா.கம்யூ., மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2024 02:33 AM

உடுமலை;பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., மடத்துக்குளம் கமிட்டி சார்பில், கிராமங்களில் மக்கள் சந்திப்புநிகழ்ச்சி நடந்தது.
கட்சியின் தாலுகா செயலாளர் வடிவேல் தலைமைவகித்தார். நிர்வாகிகள் வீரப்பன், ராஜரத்தினம், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்; அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். ஊராட்சி, பேரூராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். அமராவதி ஆற்றுப்படுகையில், ருத்ரபாளையம், கொழுமம், குமரலிங்கம் பகுதியில், ஆற்று புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
குமரலிங்கம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் மூடப்பட்டுள்ள, 30 படுக்கை வசதி கொண்ட கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்தனர். மடத்துக்குளம் தாலுகாவுக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது.