/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளிகள் மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம் பள்ளிகள் மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
பள்ளிகள் மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
பள்ளிகள் மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
பள்ளிகள் மேம்பட மக்கள் சந்திப்பு இயக்கம்
ADDED : ஜூன் 07, 2024 12:27 AM
திருப்பூர்:அனைத்து குழந்தைகளும் சமமான, தரமான கல்வியை பெறுவதை உறுதி செய்ய, கல்வி உரிமைச் சட்டம் 2009 கொண்டு வரப்பட்டது.
இச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டு கடந்தும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாத நிலை உள்ளது.
பல்வேறு குறைகள் அரசுப் பள்ளிகளில் சரி செய்யப்படாமல் உள்ளது.
போதுமான கட்டமைப்பு வசதிகள், வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடவாரியாக ஆசிரியர், 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போன்ற எதுவும் இன்னும் ஏற்படவில்லை.
இதனால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்க்க தனியார் பள்ளி களை நாடும் நிலை உள்ளது. தங்கள் வரவுக்கும், சக்திக்கும் மீறி பெற்றோர் கல்விக்காக செலவு செய்யும் நிலையில் உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழுக்களை அமைத்து பெற்றோர் பள்ளியின் அன்றாட செயல்பாடு களை கண்காணிக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியுள்ளது.
பெற்றோர்களிடம் உரிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பெரும்பாலான பள்ளிகளில் முறையாக இயங்குவதில்லை.
மாதம் ஒருமுறை இக்குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் பல மாதங்களாக இது நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
அரசுப் பள்ளிகளில் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மக்களிடம் கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் அனைத்துபகுதியிலும், மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
'நம் ஊர், நம் பள்ளி, நம் பெருமை' என்ற அக்கறையை மக்களிடம் உருவாக்குவதன் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் ஊர் தோறும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படுகிறது.
n காங்கயம், வெங்கரையாம்பாளையத்தில், மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கலந்து கொண்டார். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த மக்களுக்கும் அரசுக்கும் உள்ள பொறுப்பு, கடமை குறித்து விளக்கப்பட்டது.
கல்வி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.