/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தரைமட்ட பாலத்தில் ஓட்டை கற்கள் வைத்து 'காத்த' மக்கள் தரைமட்ட பாலத்தில் ஓட்டை கற்கள் வைத்து 'காத்த' மக்கள்
தரைமட்ட பாலத்தில் ஓட்டை கற்கள் வைத்து 'காத்த' மக்கள்
தரைமட்ட பாலத்தில் ஓட்டை கற்கள் வைத்து 'காத்த' மக்கள்
தரைமட்ட பாலத்தில் ஓட்டை கற்கள் வைத்து 'காத்த' மக்கள்
ADDED : ஜூன் 05, 2024 12:47 AM

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, சென்னிமலைபாளையம் பஸ் ஸ்டாப்பில் இருந்து கணபதிபாளையம் செல்லும் வழியில் உள்ள இணைப்புச் சாலை ஒன்றில் தரைமட்ட பாலம் உள்ளது. பாலத்தின் நடுவே 'ஆளை விழுங்கும் அளவு' ஓட்டை உள்ளது.
நீண்ட நாட்கள் ஆகியும், மூடப்படாமல் உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன் கருதி இப்பகுதி பொதுமக்கள், ஓட்டையைச் சுற்றிலும் கற்களை வைத்து பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி உள்ளனர்.
அப்பகுதியினர் கூறியதாவது:
இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சென்னிமலைபாளையத்தில் இருந்து கணபதிபாளையம் அரசு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பலர் பஸ் ஸ்டாப் செல்வதற்கு இந்த வழியை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
நடுரோட்டில் உள்ள இந்த ஆபத்தான ஓட்டையால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதுடன், வயதானவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் ஓட்டைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது.
நீண்ட நாட்களாக இந்த ஓட்டை அடைக்கப்படாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், பொதுமக்கள் சார்பில் இந்த ஓட்டையை சுற்றி கற்கள் வைத்து பாதுகாப்பு அரண் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், ஓட்டையை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.