/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பல வடிவத்தில் சாலை அனுப்பட்டி மக்கள் கவலை பல வடிவத்தில் சாலை அனுப்பட்டி மக்கள் கவலை
பல வடிவத்தில் சாலை அனுப்பட்டி மக்கள் கவலை
பல வடிவத்தில் சாலை அனுப்பட்டி மக்கள் கவலை
பல வடிவத்தில் சாலை அனுப்பட்டி மக்கள் கவலை
ADDED : ஜூலை 28, 2024 12:34 AM

பல்லடம்;பல வடிவங்கள் மற்றும் அளவில் சாலை போடப்பட்டு வருவது குறித்து, அனுப்பட்டி கிராம மக்கள் கேள்வி எழுப்பி வேதனை தெரிவித்துள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட ஊர் கவுண்டர் வீதியில் சாலை போடும் பணி துவங்கி நடந்து வருகிறது. இது, பல்வேறு வடிவங்களிலும், அளவிலும் இருப்பது குறித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: ஒரு வீதியில் ரோடு போடுவதானால், ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே அளவில் தான் இருப்பது வழக்கம். அதுபோல், ஊர் கவுண்டர் வீதியில் ஏறத்தாழ, 200 மீட்டரில் ரோடு போடும் பணி நடந்து வருகிறது. 300 மீ., அளவில் ரோடு போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அளவில் ரோடு உள்ளது.
சிலருக்கு சாதகமாக சாலையை சுருக்கியும், விரிவுபடுத்தியும் போட்டு வருகின்றனர். இதனால், சாலை பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்துவது கேள்விக்குறியாக இருப்பதுடன், முறைகேடு நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, சாலையை முழுமையாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் வரிப்பணம் இவ்வாறு வீணடிக்கப்படுவது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.