/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'பேட்டர்ன் மேக்கிங்' இலவச பயிற்சி துவக்கம் 'பேட்டர்ன் மேக்கிங்' இலவச பயிற்சி துவக்கம்
'பேட்டர்ன் மேக்கிங்' இலவச பயிற்சி துவக்கம்
'பேட்டர்ன் மேக்கிங்' இலவச பயிற்சி துவக்கம்
'பேட்டர்ன் மேக்கிங்' இலவச பயிற்சி துவக்கம்
ADDED : ஜூலை 18, 2024 10:48 PM

திருப்பூர்:திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், இலவச பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி துவங்கியுள்ளது.
பயிற்சியை துவக்கிவைத்து, கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நீடித்துவருகிறது. வரும்காலங்களில் மெர்ச்சன்டைசிங், பேட்டர்ன் மேக்கிங், டெய்லர் பிரிவுகளுக்கு மேலும் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர் தேவைப்படுவர். பின்னலாடை துறையில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் விதமாகவும், தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்தும்வகையிலும், நிப்ட்-டீ கல்லுாரியில் இலவச மற்றும் பகுதிநேர ஆடை உற்பத்தி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பின்னலாடை துறையில் கால்பதிக்க விரும்பும் புதியவர்கள், ஏற்கனவே பணியில் உள்ளோர் இப்பயிற்சியில் இணைந்து தங்கள் ஆடை உற்பத்தி திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மணியன் நன்றி கூறினார். இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், 95979 14182 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
---
இலவச பேட்டர்ன் மேக்கிங் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள்.