/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாட்னா எக்ஸ்பிரஸ் இன்று புறப்படுகிறது பாட்னா எக்ஸ்பிரஸ் இன்று புறப்படுகிறது
பாட்னா எக்ஸ்பிரஸ் இன்று புறப்படுகிறது
பாட்னா எக்ஸ்பிரஸ் இன்று புறப்படுகிறது
பாட்னா எக்ஸ்பிரஸ் இன்று புறப்படுகிறது
ADDED : ஜூன் 04, 2024 12:28 AM
திருப்பூர்;பீகார் மாநிலம் செல்லும் வடமாநில பயணிகள் வசதிக்காக, இன்று (4ம் தேதி) மங்களூரு - பாட்னா சிறப்பு ரயில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
இன்று இரவு, 8:00 மணிக்கு மங்களூருவில் புறப்படும் ரயில், நாளை (5ம் தேதி) அதிகாலை, 4:53 மணிக்கு திருப்பூர் வருகிறது; 5:20 மணிக்கு ஈரோடு செல்கிறது. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக வடமாநிலங்கள் வழியாக, 5 மற்றும், 6ம் தேதி பயணித்து, வரும், 7ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு பீகார் தலைநகர் பாட்னா சென்றடைகிறது.
கேரளா, தமிழகத்தில் இருந்து பாட்னா செல்ல வாரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கிய போதும், கூட்டம் குறைந்தபாடில்லை. திடீரென பயணத்தை திட்டமிடுவோர், முன்பதிவு இடம் கிடைக்காதவர்களால் எர்ணாகுளம் - பாட்னா, திருவனந்தபுரம் - பாட்னா ரயில்கள் எப்போது கூட்ட நெரிசலில் நிறைந்து காணப்படுகிறது.
இதனால், பீகார் செல்லும் வடமாநில பயணிகள் பயணிக்க ஏதுவாக, கூடுதல் முன்பதிவு பெட்டிகளுடன் (12 பெட்டிகள்) சிறப்பு ரயில் இன்று இயக்கப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து போத்தனுார் வழியாக திருப்பூர் வரும் இந்த ரயில், கோவை ஜங்ஷன் செல்லாதென சேலம் கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.