/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வளர்ச்சிக்கு வழி! ஜப்பான் சந்தை சாதகம் ஏற்றுமதியாளர் முனைப்பு வளர்ச்சிக்கு வழி! ஜப்பான் சந்தை சாதகம் ஏற்றுமதியாளர் முனைப்பு
வளர்ச்சிக்கு வழி! ஜப்பான் சந்தை சாதகம் ஏற்றுமதியாளர் முனைப்பு
வளர்ச்சிக்கு வழி! ஜப்பான் சந்தை சாதகம் ஏற்றுமதியாளர் முனைப்பு
வளர்ச்சிக்கு வழி! ஜப்பான் சந்தை சாதகம் ஏற்றுமதியாளர் முனைப்பு
ADDED : ஜூன் 27, 2024 11:22 PM
திருப்பூர் : ''ஜப்பான் நாட்டு ஆயத்த ஆடை வர்த்தக சந்தை, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமானதாக உள்ளது; வர்த்தகத்தை வசப்படுத்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆயத்தமாக வேண்டும்'' என்று கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்த கலந்துரையாடல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலக அரங்கில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் திருக்குமரன் வரவேற்றார்.
ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''ஜப்பானின் ஜவுளி இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு, வெறும் 1 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவின் சந்தை பங்களிப்பை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஜப்பான் அரசு ஆராய்ந்துவருகிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில், 90 சதவீதம் ஜப்பான் நாட்டு இயந்திரங்களே நிறுவப்பட்டுள்ளன. ஜப்பான் நிறுவனங்கள், ஆடை தயாரிப்பு இயந்திர தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவ வேண்டும்' என்றார்.
டெக்ஸ்டைல் கமிட்டி இயக்குனர் பர்மன் பேசுகையில், ''ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கு தர பரிசோதனை மையம் இல்லாதது, ஜப்பானுக்கான இந்திய ஏற்றுமதி பங்களிப்பு குறைவுக்கு முக்கிய காரணியாக உள்ளது. இதை பூர்த்தி செய்ய, டெக்ஸ்டைல் கமிட்டி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. கோல்கத்தா மற்றும் திருப்பூரில் ஜப்பானுக்கான தர பரிசோதனை மையம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச்செயலாளர் குமார் பேசினார். ஜப்பான் நாட்டு நிசென்கென் நிறுவன தொழில் மேம்பாட்டு நிர்வாகி ஜூஞ்சி இவாட்டா மற்றும் நோபுகோ டனாகா ஆகியோர் பேசுகையில், 'ஜப்பானுக்கான ஏற்றுமதியை, வங்கதேசம் மிக குறுகிய காலத்திலேயே பலமடங்கு அதிகரித்துவிட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஜப்பான் சந்தை மீது அதிக கவனம் செலுத்தவேண்டும்' என்றனர்.