/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி., கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்தல் பி.ஏ.பி., கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்தல்
பி.ஏ.பி., கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்தல்
பி.ஏ.பி., கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்தல்
பி.ஏ.பி., கால்வாய் கரையில் மரங்கள் வெட்டி கடத்தல்
ADDED : ஜூலை 08, 2024 01:44 AM

உடுமலை:உடுமலை அருகே, பி.ஏ.பி., கால்வாய் கரையில் இருந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள, பொன்னாபுரம் - பூளவாடி பி.ஏ.பி.,பகிர்மான கால்வாய் வாயிலாக, 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல கி.மீ., துாரம் அமைந்துள்ள இக்கால்வாய் கரையின் இரு புறமும், நுாற்றுக்கணக்கான மரங்கள் உள்ளன.
பெரிய அளவில் காணப்படும் இம்மரங்களை, கடந்த சில நாட்களாக மர்ம நபர்களால் வெட்டி, வாகனங்கள் வாயிலாக கடத்தி வருகின்றனர். இதனால், கால்வாய் கரை பாதிப்பதோடு, கால்வாய் அடையாளத்தை இழந்து வருகிறது. சட்ட விரோதமாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.