/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தனித்திறமையை காட்டும் ஓவியம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண்காட்சி தனித்திறமையை காட்டும் ஓவியம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண்காட்சி
தனித்திறமையை காட்டும் ஓவியம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண்காட்சி
தனித்திறமையை காட்டும் ஓவியம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண்காட்சி
தனித்திறமையை காட்டும் ஓவியம் 'நிப்ட்-டீ' கல்லுாரியில் கண்காட்சி
ADDED : ஜூலை 17, 2024 01:44 AM

திருப்பூர்:உலக மக்கள் தொகை தினம், ஜூலை 11 ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, 'நிப்ட்-டீ' கல்லுாரியில் நேற்று, உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஓவிய கண்காட்சி நடந்தது.
ஆடை வடிவமைப்பு துறை முதலாம் ஆண்டு மாணவர்கள், கலை படைப்பு திறனை கொண்டு ஓவியம் வரைந்திருந்தனர். மக்கள் தொகை மட்டுமல்லாது, உலகளாவிய உயிரினங்கள், கட்டடங்கள், இயற்கை வளங்கள் குறித்த கண்ணோட்டத்தில் ஓவியம் வரையப்பட்டிருந்தது. இந்தியாவின் மதுபானி, சித்தாரா, பெஸ்லி ஓவியம், சீனாவின் இன் யாங் ஓவியங்களை மாதிரியாக வைத்து, புதிய கோணத்தில் ஓவியம் அமைக்கப்பட்டிருந்தது. முதலாம் ஆண்டு பயிலும், 59 மாணவர்கள் இணைந்து, ஓவியங்களை வரைந்தனர்.
ஐந்து மணி நேரத்தில் ஓவியம் வரையப்பட்டு, கல்லுாரி வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ஆசிரியர் பூபதி விஜய் கண்காட்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். ---
நிப்ட்-டீ கல்லுாரியில், உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஓவிய கண்காட்சி நடைபெற்றது.