/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை
போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை
போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை
போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரை
ADDED : ஜூலை 10, 2024 11:48 PM
திருப்பூர் : தேனியை சேர்ந்தவர் மலைச்சாமி, 26. குடும்பத்தினருடன் இடுவாயில் தங்கி, அருள்புரத்தில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.
போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வாலிபரை கண்காணித்து வந்த போலீசார், அவரின் வீட்டில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, 800 வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக, மலைச்சாமியை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
இந்த மாத்திரைகளை நண்பர் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். எங்கிருந்து வாங்கி வந்தார், யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.