/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவர் பேரவை தேர்தல் இணைய வழியில் ஓட்டுப்பதிவு மாணவர் பேரவை தேர்தல் இணைய வழியில் ஓட்டுப்பதிவு
மாணவர் பேரவை தேர்தல் இணைய வழியில் ஓட்டுப்பதிவு
மாணவர் பேரவை தேர்தல் இணைய வழியில் ஓட்டுப்பதிவு
மாணவர் பேரவை தேர்தல் இணைய வழியில் ஓட்டுப்பதிவு
ADDED : ஜூலை 20, 2024 12:35 AM

உடுமலை;உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், மாணவர் பேரவைத்தேர்தல் நடந்தது.
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், மாணவர் பேரவைத்தேர்தல் இணையவழியில் நடந்தது. இத்தேர்தலில், இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் படிக்கும், 97 மாணவியர் போட்டியிட்டனர்.
இளநிலை இரண்டு மற்றும் மூன்றாமாண்டு, முதுநிலை இரண்டாமாண்டு படிக்கும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர், இணையவழியில் ஓட்டுப்பதிவு செய்தனர்.
மாணவியர் பேரவை தலைவர், செயலாளர், துணைச்செயலாளர் மற்றும் பல்வேறு மன்ற செயலாளர்கள், துணைச்செயலாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
ஓட்டுப்பதிவின் இறுதியில், அதிக ஓட்டுகள் பெற்று தலைவராக, இளநிலை மூன்றாமாண்டு ஆங்கில இலக்கிய பிரிவைச்சேர்ந்த ஜேன் கிரிஸி கேத்ரின், செயலாளராக, இளநிலை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூன்றாமாண்டைச்சேர்ந்த சுபஸ்ரீ,
மாணவ துணைச்செயலாளராக மூன்றாமாண்டு வணிகவியல் துறை மாணவி முனவரா பர்வீன் மற்றும் மன்ற செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற மாணவியருக்கு, கல்லுாரி செயலாளர் சுமதி, இயக்குனர் மஞ்சுளா, கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.