ADDED : ஜூலை 22, 2024 12:07 AM
திருப்பூர்;மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, சப்கலெக்டர் சவுமியாவிடம் அளித்த மனு:விவசாயிகள் ஏராளமானோர் பட்டா மாறுதல்களுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
முன்னுரிமை அடிப்படையில்தான் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள், அந்தந்த வி.ஏ.ஓ.,க்களால் பரிசீலிக்கப்பட்டு துணைதாசில்தார்களுக்கு அனுப்பப்படுகிறது; அங்கேயும் இதே நடைமுறையே கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும், நிர்ணயிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் பட்டாமாறுதல் செய்யமுடிவதில்லை.
வி.ஏ.ஓ., பரிசீலனையின்போது, ஒருவரின் பட்டா மாறுதல் மனுவில் குறைபாடுகள் இருந்தாலும், அடுத்தடுத்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. விவசாயிகள் பட்டா, வீட்டுமனை பட்டா மனுக்களுக்கு தனித்தனியாக முன்னுரிமை அளித்து, காலதாமதமின்றி பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிராமப்புற விவசாயிகள், கால்டை வளர்ப்பை பிரதானமாக கொண்டுள்ளனர்.வேளாண், தோட்டக்கலைத்துறை, பொறியியல் துறை மூலம், அதிக எண்ணிக்கையில் தட்டுவெட்டும் இயந்திரங்களை தருவித்து, விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.