/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சின்ன வெங்காயம் நடவுப்பணி விறுவிறுப்பு சின்ன வெங்காயம் நடவுப்பணி விறுவிறுப்பு
சின்ன வெங்காயம் நடவுப்பணி விறுவிறுப்பு
சின்ன வெங்காயம் நடவுப்பணி விறுவிறுப்பு
சின்ன வெங்காயம் நடவுப்பணி விறுவிறுப்பு
ADDED : ஜூன் 05, 2024 11:02 PM
பொங்கலுார்: கோடை மழையால் தற்போது காலநிலை மாறியுள்ளது. குளிர்ந்த காற்று வீசத் துவங்கியுள்ளது. இது சின்ன வெங்காய பயிருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதுவரை தொழு உரம் இடுதல், உழவு ஒட்டுதல், பார் கட்டுதல் போன்ற பணிகளை செய்து விவசாயிகள் நிலத்தை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க பலர் சொட்டு நீர் பாசன குழாய்களை அமைத்துள்ளனர்.
வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அறுவடை காலத்தில் அதிக நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும். மேலும் இந்த சீசனில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் வைகாசி பட்டத்தில் நடவு செய்வதையே விரும்புகின்றனர்.
விதைக்காக, விவசாயிகள் பழைய இருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து ஒரு கிலோ சின்ன வெங்காயம், 50 ரூபாய்க்கு விலைக்கு விற்பனையாகிறது.