ADDED : ஜூன் 25, 2024 01:10 AM
திருப்பூர்;திருப்பூர், கோல்டன் நகர், கருணாகரபுரி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; பனியன் தொழிலாளி. கடந்த 17ம் தேதி நண்பர் சிலருடன் அமர்ந்திருந்தார். டூவீலரில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல் வாலிபரை வெட்டி கொலை செய்தனர்.
தனிப்படை போலீசாரின் விசாரணையில், நண்பர்களுடன் மது அருந்திய போது, பிரியாணியில் மண் விழுந்தது தொடர்பாக எழுந்த பிரச்னையில் சதீஷ்குமாரை கொலை செய்து தெரிந்தது.
கொலை தொடர்பாக, பாலகிருஷ்ணன், 24, பாண்டியராஜன், 30, கவிஷேக், 24 மற்றும் சக்தி சண்முகம், 27 என, நான்கு பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த சிவா, 24 என்பவரை திருப்பூர் வடக்கு போலீசார் தேடி வந்தனர். மதுரையில் பதுங்கியிருந்த வாலிபரை நேற்று கைது செய்தனர்.