Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒருவர் வரலாம்... இருவர் கூடாது; இதென்ன புதிய நிபந்தனை?

ஒருவர் வரலாம்... இருவர் கூடாது; இதென்ன புதிய நிபந்தனை?

ஒருவர் வரலாம்... இருவர் கூடாது; இதென்ன புதிய நிபந்தனை?

ஒருவர் வரலாம்... இருவர் கூடாது; இதென்ன புதிய நிபந்தனை?

ADDED : ஜூன் 27, 2024 11:27 PM


Google News
திருப்பூர் : அனைத்து துறை சார்ந்த அலுவலகங்களிலும் குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகளுடன் அதிகாரிகள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்ற நியதி உள்ளது. நீண்ட காலமாக இந்த நடவடிக்கை கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்தது.

திருப்பூர் மாவட்ட அளவிலான நுகர்வோர் அமைப்புகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு சுட்டிக் காட்டி வலியுறுத்தின. அதனடிப்படையில் கலெக்டர் அறிவுறுத்தல்படி, துறைவாரியாக தற்போது நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு அளவிலான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், தொழிலாளர் நல உதவி கமிஷனர் (அமலாக்கம்) அலுவலகத்தில் இக்கூட்டம் நடந்தது. இதற்கான அழைப்பிதழ் மாவட்டத்தில் உள்ள, 11 நுகர்வோர் அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அமைப்பு சார்பில் ஒரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இது நுகர்வோர் அமைப்பினரை அதிருப்திக்கு ஆட்படுத்தியுள்ளது.

டீ கூட வேண்டாம்


நுகர்வோர் அமைப்பினர் கூறியதாவது:

மாவட்டத்தில் மொத்தம், 11 அமைப்புகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவையாக உள்ளன. இந்த அமைப்புகளிலும் அனைத்துத்துறை கூட்டங்களிலும் ஒரு சில அமைப்புகள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். துறைவாரியாக முக்கியத்துவம் உள்ள கூட்டத்தில் பெரும்பாலும் அனைத்து அமைப்பும் பங்கேற்கிறது.கூட்டத்துக்கு வரும், ஐந்து அமைப்புகளில் கூட ஒருவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இருவர் பங்கேற்றால் தான் அமைப்பு ரீதியாக கருத்துகளை விடுபடாமல் வெளிப்படுத்த முடியும்.

டீ, ஸ்னாக்ஸ் செலவு செய்ய தயக்கம் காட்டுவது தான் இதற்கு காரணம். வருவாய் நோக்கத்தில் நுகர்வோர் அமைப்பை நடத்துவதில்லை. கூட்டம் நடத்த செலவுக்கு நிதியில்லை என்றால் அதிகாரிகள் அந்த டீயை கூட நிறுத்தி விடலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us