Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஒரு லட்சம் மரக்கன்று; 'வனம்' இலக்கு

ஒரு லட்சம் மரக்கன்று; 'வனம்' இலக்கு

ஒரு லட்சம் மரக்கன்று; 'வனம்' இலக்கு

ஒரு லட்சம் மரக்கன்று; 'வனம்' இலக்கு

ADDED : ஆக 02, 2024 05:21 AM


Google News
பல்லடம் : '' பருவமழை கால கட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும்'' என்ற இலக்கை, பல்லடம் 'வனம்' அமைப்பு நிர்ணயித்துள்ளது.

பல்லடம் 'வனம்' அமைப்பு, மரக்கன்று நடுதல், மழை நீரை சேகரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பல்லடம் வட்டாரம் முழுவதும், கோவில் நிலம், புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் நிலங்கள் பலவற்றில், மரக்கன்றுகளை நாட்டு, வனங்களை உருவாக்கி பராமரித்து வருகிறது.

'வனம்' அமைப்பின் இணை இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், 'ஆண்டுதோறும் பருவ மழை காலகட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

மழை காரணமாகவே நடப்படும் மரக்கன்றுகள் இயற்கையாகவே வளர்ந்து விடும் என்பதால், இக்காலகட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறோம்.

நடப்பு ஆண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, இலக்கை எட்ட வேகமாக செயல்பட்டு வருகிறோம்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us