/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மருந்து கடையில் 'கிளினிக்' சீல் வைத்த அதிகாரிகள் மருந்து கடையில் 'கிளினிக்' சீல் வைத்த அதிகாரிகள்
மருந்து கடையில் 'கிளினிக்' சீல் வைத்த அதிகாரிகள்
மருந்து கடையில் 'கிளினிக்' சீல் வைத்த அதிகாரிகள்
மருந்து கடையில் 'கிளினிக்' சீல் வைத்த அதிகாரிகள்
ADDED : ஜூன் 19, 2024 02:10 AM

பல்லடம்:ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி, பல்லடம் இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர், இடுவாய், சின்னகாளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த, மிராக்கிள் கிளினிக் மற்றும் காவியா மருந்துக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பணியில் இருந்தவர்களிடம் விசாரித்த பின், கிளினிக் மற்றும் மருந்துக்கடைக்கு 'சீல்' வைத்தனர்.
மருத்துவ துறையினர் கூறியதாவது:
கிளினிக் முகப்பில் மருத்துவர் மார்ஷல் முகேஷ் ஆன்டணி எம்.பி.பி.எஸ்., என்ற பெயர் பலகை இருந்தது.
ஆனால், அங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்துக்கடை உரிமையாளர், லிட்டில் ப்ளோரா என்பவர் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
அங்கு வந்த நோயாளிகளிடம் விசாரிக்கும் போது, லிட்டில் ப்ளோரா தான் மருத்துவம் பார்த்து வருவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, மருத்துவர் மார்ஷல் முகேஷை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் உரிய விளக்கம் அளிக்கவில்லை. மருத்துவம் பார்த்து, கிளினிக் நடத்தி வந்த பெண்ணும் உரிய விளக்கம் அளிக்கவில்லை.
எனவே, கிளினிக் மற்றும் மருந்துக்கடைக்கு 'சீல்' வைத்துள்ளோம். இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவுறுத்திஉள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.