/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கல்' நட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்: ஐகோர்ட் உத்தரவுக்கு மதிப்பு அவ்வளவு தானா? 'கல்' நட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்: ஐகோர்ட் உத்தரவுக்கு மதிப்பு அவ்வளவு தானா?
'கல்' நட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்: ஐகோர்ட் உத்தரவுக்கு மதிப்பு அவ்வளவு தானா?
'கல்' நட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்: ஐகோர்ட் உத்தரவுக்கு மதிப்பு அவ்வளவு தானா?
'கல்' நட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்: ஐகோர்ட் உத்தரவுக்கு மதிப்பு அவ்வளவு தானா?
ADDED : மார் 13, 2025 07:02 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த கே.அய்யம்பாளையம் கிராமத்தில், கரடிவாவிக்கு செல்லும் பொது வழித்தட பாதை புதர்கள் மண்டி கிடப்பதாகவும், தனியார் சிலரின் ஆக்கிரமிப்பு காரணமாக, பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும், இதே பகுதியைச் சேர்ந்த அசோக் குமார், 35 என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து, நடவடிக்கை எடுத்த பல்லடம் வருவாய்த் துறையினர், பாதையை மீட்டெடுக்காமல், கடமைக்கு கல் மட்டும் நட்டுச் சென்றதாக, அசோக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கரடிவாவி செல்வற்கான பொது வழிப்பாதை புதர்கள் மண்டியும், ஆக்கிரமிப்புகளாலும் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர பலமுறை மனு அளித்தும் ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குத் தொடர்ந்தேன். விசாரித்த நீதிபதி, பாதையை மீட்க,வருவாய் துறைக்கு உத்தரவிட்டார்.
கோர்ட் உத்தரவை பின்பற்றி, நேற்று காமநாயக்கன்பாளையம் போலீஸ் பாதுகாப்புடன் இப்பகுதிக்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள், புதருக்குள் சென்று ஒரே ஒரு கல் மட்டும் நட்டு விட்டு, பாதையை மீட்டெடுத்ததாக கூறினர்.
ஐகோர்ட் உத்தரவிட்ட பின்னரும் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். இந்த பாதையை சுத்தம் செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், இப்பகுதி மக்கள், 4 கி.மீ., தூரம் சுற்றி செல்வது குறையும்.
கடந்த, 2010ம் ஆண்டு முதல் இந்த பாதையை மீட்க போராடி வருகிறேன். ஆனால், அதிகாரிகளின் இந்த செயல்பாடு கவலை அளிப்பதாக உள்ளது.
பொது வழிப்பாதையை மீட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.