ADDED : ஜூலை 19, 2024 08:52 PM
திருப்பூர்:வாடிக்கையாளரின் புகார் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர், புதுக்காடு பகுதியில் உள்ள ஓட்டலில், கெட்டு போன சிக்கன் விற்பனை செய்யப்பட்டதாக, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு புகார் அனுப்பப்பட்டத. விளைவாக, உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி, அக்கடையில் ஆய்வு மேற்கொண்டார்.உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில், ''புகார் தெரிவிக்கப்பட்ட கடையில் நடத்தப்பட்ட ஆய்வின் போது, கெட்டுப் போன இறைச்சியை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலறையை சுத்தம், சுகாதாரத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறு சுழற்சிக்கு வழங்கும் திட்டத்தில் இணைய வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.