ADDED : ஜூன் 13, 2024 02:29 AM
திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்தவர்கள், தண்டபாணி, மேகநாதன்; சகோதரர்கள். கடந்த 2008 ஜூலை 10ம் தேதி தனித்தனி பட்டா கேட்டு அவிநாசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.
மண்டல துணை தாசில்தாராக இருந்த பாலசுப்ரமணியம் என்பவர், பட்டா வழங்க, 8,000 ரூபாய் லஞ்சம் தருமாறு கூறினார். லஞ்சமாக தண்டபாணி கொடுத்த பணத்தை பாலசுப்ரமணியம் பெற்ற போது போலீசார் கைது செய்தனர். திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்லத்துரை வழக்கை விசாரித்து, லஞ்சம் வாங்கிய பாலசுப்ரமணியத்துக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நேற்று உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில் 1.64 லட்சம் ரூபாய் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.