/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓ.இ., மில்லில் தீ விபத்து தீயில் தொழிலாளி பலி ஓ.இ., மில்லில் தீ விபத்து தீயில் தொழிலாளி பலி
ஓ.இ., மில்லில் தீ விபத்து தீயில் தொழிலாளி பலி
ஓ.இ., மில்லில் தீ விபத்து தீயில் தொழிலாளி பலி
ஓ.இ., மில்லில் தீ விபத்து தீயில் தொழிலாளி பலி
ADDED : ஜூன் 04, 2024 12:30 AM
திருப்பூர்;வெள்ளகோவிலில், ஓ.இ., மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிலாளி சிக்கி பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், பழனிசாமி நகரை சேர்ந்தவர் ரவிசந்திரன், 55. கோவை ரோட்டில் ஓ.இ., மில்லில் நடத்தி வருகின்றார். 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம், பஞ்சு அரைக்கும் மெஷினில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது. தொடர்ந்து தீப்பிடித்து எரிய துவங்கியது. அறையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளில் வேகமாக பிடித்து எரிந்தது.
மில்லில் வேலை செய்து கொண்டிருந்த விருதுநகர், நரிக்குடியை சேர்ந்த மனோஜ், 20 என்பவர் வெளியே வர முடியாமல் சிக்கி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். வெள்ளகோவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.