ADDED : ஜூலை 17, 2024 11:57 PM

அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில், 'அன்னம் கொடுத்து மகிழ்' 50வது வாரமாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
துலுக்கமுத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேறுகால சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு, 'அன்னம் கொடுத்து மகிழ்' என்ற தலைப்பில், அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி 50வது வாரமாக நடைபெற்றது. ரோட்டரி தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன், பொருளாளர் ராஜா, சிறப்பு விருந்தினர் சிவசுப்பிரமணியம், விசித்திரா, அரசு மருத்துவர் மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். 70 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.