Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வடக்கு குறுமைய போட்டி ஆலோசனை கூட்டம்

வடக்கு குறுமைய போட்டி ஆலோசனை கூட்டம்

வடக்கு குறுமைய போட்டி ஆலோசனை கூட்டம்

வடக்கு குறுமைய போட்டி ஆலோசனை கூட்டம்

ADDED : ஜூலை 19, 2024 08:46 PM


Google News
திருப்பூர்:திருப்பூர் வடக்கு குறுமைய விளையாட்டுப் போட்டிகளை, சிறுபூலுவபட்டி, ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்துகிறது.

போட்டி அட்டவணை, போட்டி நடத்துவது, நடுவர் குழு பணி நியமனம் குறித்து, பள்ளி உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பிரியா வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில்,' விளையாட்டு போட்டிகளின் போது வீரர், வீராங்கனைகளுக்கு காயம் ஏற்படக்கூடாது. நடுநிலை தவறாமல் போட்டியை நடத்த வேண்டிய பொறுப்பு பள்ளிக்கு உண்டு. எனவே, அனைத்து நிலையிலும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.

திருப்பூர் வடக்கு குறுமைய கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஜெரால்டு, பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஒருங்கிணைத்தனர். குறுமையை இணைச்செயலாளர்கள் இளவரசன், நல்லசிவம், ஞானவேல், சௌமியா, ஜெயலட்சுமி, உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us