/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'யாரும் துாக்கத்தை கெடுத்து விடாதீர்கள்' ஊராட்சி தலைவரை 'கலாய்த்து' போஸ்டர் ; கண்டியன் கோவில் பகுதியில் 'லக...லக' 'யாரும் துாக்கத்தை கெடுத்து விடாதீர்கள்' ஊராட்சி தலைவரை 'கலாய்த்து' போஸ்டர் ; கண்டியன் கோவில் பகுதியில் 'லக...லக'
'யாரும் துாக்கத்தை கெடுத்து விடாதீர்கள்' ஊராட்சி தலைவரை 'கலாய்த்து' போஸ்டர் ; கண்டியன் கோவில் பகுதியில் 'லக...லக'
'யாரும் துாக்கத்தை கெடுத்து விடாதீர்கள்' ஊராட்சி தலைவரை 'கலாய்த்து' போஸ்டர் ; கண்டியன் கோவில் பகுதியில் 'லக...லக'
'யாரும் துாக்கத்தை கெடுத்து விடாதீர்கள்' ஊராட்சி தலைவரை 'கலாய்த்து' போஸ்டர் ; கண்டியன் கோவில் பகுதியில் 'லக...லக'
UPDATED : ஜூலை 24, 2024 01:55 AM
ADDED : ஜூலை 23, 2024 11:24 PM

பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியத்தில் பரப்பளவில் பெரிய ஊராட்சியாக கண்டியன்கோவில் உள்ளது. ஊராட்சி தலைவராக கோபால், ஒன்றிய கவுன்சிலராக தேன்மொழி (தி.மு.க.,) ஆகியோர் உள்ளனர்.
பெரிய கிராமம் என்பதால் பிரச்னைக்கும் குறைவில்லை. பல்வேறு ரோடுகள் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது. சிதிலம் அடைந்து கிடக்கும் நிழற்குடை போன்ற ஒரு கட்டடத்தின் போட்டோ மற்றும் குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டின் போட்டோவுடன் போஸ்டர் அடித்து கிராமம் முழுக்க யாரோ ஒட்டி உள்ளனர்.
அதில், கண்டியன்கோவில் ஊராட்சி பொதுமக்கள் என்ற வாசகம் மட்டும் இடம்பெற்றுள்ளது. அதில், 'ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தி.மு.க., கவுன்சிலர் மற்றும் தலைவரை பொதுமக்கள் யாரும் துாக்கத்தை கெடுத்து விடாதீர்கள்.
கண்டியன்கோவில் ஊராட்சியின் ஐந்து ஆண்டு அவல ஆட்சி. கவுன்சிலர், தலைவரால் வரலாறு காணாத வீழ்ச்சி. இதற்கு நிர்வாக செயல்பாடற்ற அவர்கள் இருவருமே சாட்சி,' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
போஸ்டர் விவகாரம் குறித்து, கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால் கூறியதாவது:
கண்டியன் கோவில், கொங்கு மண்டலத்தில் பரப்பளவில் மிகப்பெரிய ஊராட்சி. குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. சாக்கடை, தெருவிளக்கு வசதிகள் பெருமளவு செய்யப்பட்டு உள்ளது. நான்கு ரோடுகள் மோசமாக உள்ளது.
அதற்காக சென்னை சென்று அதிகாரிகளை சந் தித்து கோரிக்கை வைத்துள்ளேன். விரைவில் ரோடு போடுவதற்கான அனுமதி கிடைக்கும். ரோடு பணி முடிந்து விட்டால் பெரும்பாலான பணிகள் முடிந்து தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாறும். யாரோ சிலர் இதுபோல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலரை 'கலாய்த்து' ஒட்டி உள்ள போஸ்டரால், கண்டியன் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.