/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நகர வீதிகளில் வெளிச்சம் இல்லை: பொதுமக்கள் புலம்பல் நகர வீதிகளில் வெளிச்சம் இல்லை: பொதுமக்கள் புலம்பல்
நகர வீதிகளில் வெளிச்சம் இல்லை: பொதுமக்கள் புலம்பல்
நகர வீதிகளில் வெளிச்சம் இல்லை: பொதுமக்கள் புலம்பல்
நகர வீதிகளில் வெளிச்சம் இல்லை: பொதுமக்கள் புலம்பல்
ADDED : ஜூன் 11, 2024 12:05 AM
உடுமலை:உடுமலை நகர வீதிகளில், தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரத்தில் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படுகிறது.
உடுமலை நகரில், 33 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பான்மையான குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள் முழுமையாக எரிவதில்லை.
பாதி விளக்குகள் இருந்தும் இல்லாத நிலைதான் உள்ளது. இதனால் சில பகுதிகளில், திருட்டு பயமும் அதிகரித்துள்ளது.
உடுமலை நகரின் பிரதான பகுதியாகவும், பரப்பரப்பான இடமாகவும் இருப்பது ராஜேந்திரா ரோடு. இப்பகுதியில்தான் வாரச்சந்தை, அரசு பள்ளி, ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது.
பஸ் ஸ்டாண்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கும், போடிபட்டி உட்பட நகரையொட்டி உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜேந்திரா ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
இப்பகுதியில் தெருவிளக்குகள் பலவும் பழுதடைந்துள்ளது. இதனால் மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் மக்கள் பீதியுடன் செல்ல வேண்டியுள்ளது. அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்களும், இருள் சூழ்ந்திருப்பதை கண்டு அச்சப்படுகின்றனர்.
நெடுஞ்சாலை பகுதியிலும், நகராட்சி நிர்வாகம் சார்பில் சென்டர் மீடியனில் அமைத்துள்ள விளக்குகள், பாதி எரியாத நிலையில் உள்ளன. தெருவிளக்குகளை சுழற்சி முறையில் பழுது பார்த்து சீரமைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.
பழுதாகும் தெருவிளக்குகள், அதே நிலையில்தான் பல மாதங்களாக உள்ளன. இதனால் நகர மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.