/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வித்யாசாகர் பள்ளிக்கு தேசிய தரச்சான்று வித்யாசாகர் பள்ளிக்கு தேசிய தரச்சான்று
வித்யாசாகர் பள்ளிக்கு தேசிய தரச்சான்று
வித்யாசாகர் பள்ளிக்கு தேசிய தரச்சான்று
வித்யாசாகர் பள்ளிக்கு தேசிய தரச்சான்று
ADDED : ஜூன் 30, 2024 02:18 AM

திருப்பூர்;இந்தியாவின், முதல் தேசிய அளவிலான பள்ளி மதிப்பீட்டு அமைப்பாக, 'க்யூ எஸ்.ஐ., கேஜ் (QSI-GAUGE) செயல்படுகிறது. இந்த அமைப்பு பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலை.,களை மதிப்பீடு செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.
இதில், பள்ளி மதிப்பீட்டு முறை, சர்வதேசமயமாக்கல், திறன் மேம்பாடு, மின் கற்றல், விளையாட்டு நடவடிக்கை, கலை மற்றும் கலாசாரம் என, ஐந்து சிறப்பு அளவுகோல்களை கொண்டு, பள்ளிகளின் தரத்தை மதிப்பீடு செய்கிறது.அந்த அடிப்படையில், திருப்பூர் வித்யாசாகர் பள்ளி தங்க தரச்சான்று பெற்றுள்ளது. அத்துடன், பள்ளியில் கற்பித்தல் முறை, மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட கவனிப்புக்காக வைர தரச்சான்றும் பெற்றுள்ளது.சான்றிதழ் வழங்கும் விழா, இந்துாரில் நடந்தது.
வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் சிவப்பிரியா, பள்ளி முதல்வர் சசிரேகா ஆகியோர் இணைந்து விருதுக்கான சான்றிதழை பெற்றனர். ம.பி., மாநில நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஸ்ரீ கைலாஷ் விஜயவர்க்கியா, இந்துார் ஐ.ஐ.எம்., இயக்குனர் ஹிமான்ஷூ ராய் உட்பட பலர் பங்கேற்றனர்.
----
திருப்பூர் வித்யாசாகர் பள்ளிக்கு தங்கம் மற்றும் வைரத் தரச்சான்றை, ம.பி., அமைச்சர் ஸ்ரீகைலாஷ் விஜயவர்க்கியா, இந்துார் ஐ.ஐ.எம்., இயக்குனர் ஹிமான்ஷூ ராய் உள்ளிட்டோரிடம் இருந்து பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் சிவப்பிரியா, பள்ளி முதல்வர் சசிரேகா ஆகியோர் பெற்றனர்.