/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நல்லாறு 'நல்லா இல்ல!' அழியும் முன் காப்பாற்ற வேண்டும் நல்லாறு 'நல்லா இல்ல!' அழியும் முன் காப்பாற்ற வேண்டும்
நல்லாறு 'நல்லா இல்ல!' அழியும் முன் காப்பாற்ற வேண்டும்
நல்லாறு 'நல்லா இல்ல!' அழியும் முன் காப்பாற்ற வேண்டும்
நல்லாறு 'நல்லா இல்ல!' அழியும் முன் காப்பாற்ற வேண்டும்
ADDED : ஜூலை 19, 2024 11:24 PM

திருப்பூர்:'நல்லாறு கரையையொட்டி, சாலை அமைக்கும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன், பல ஆண்டுகளாக, ஆற்றில் மண்டியுள்ள புதர்களை அகற்ற வேண்டும்' என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அன்னுார், கருவலுார், அவிநாசி, பூண்டி வழியாக செல்லும் நல்லாற்றில், மழையின் போது வெள்ளம் வழிந்தோடும்; பெருமழை சமயங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும். திருப்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நல்லாற்றை ஒட்டி சாலை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் கடந்து செல்லும் நல்லாற்றை மையமாக கொண்டு, அதன் கரையையொட்டி ரோடு அமைக்கலாம் என்ற யோசனை முன்னெடுக்கப்பட்டது.
இதன் வாயிலாக, அவிநாசி ரோடு, அங்கேரிபாளையம் ரோடு, பி.என்.,ரோடு பகுதிகளை கடந்து, கூலிபாளையம் ரோடு, ஊத்துக்குளி ரோடு மற்றும் காங்கயம் ரோடு பகுதிகளை சென்றடையும் வகையில், ரோடு அமைக்கலாம் என, மாநகராட்சி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டு, திட்டம் பரிசீலனையில் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக முதற்கட்ட ஆய்வும் நடந்தது; இதில், நல்லாறு கடந்து செல்லும் பகுதி, அதன் குறுக்கில் உள்ள பாலங்கள், ஆற்றில் வந்து சேரும் ஓடைகள் குறித்த கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக, வல்லுனர் குழு அமைத்து, கரையோரம் சாலை அமைக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் துவங்கும் முன் நல்லாறு கரையை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.