/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திறந்தவெளி சாக்கடையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள் திறந்தவெளி சாக்கடையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
திறந்தவெளி சாக்கடையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
திறந்தவெளி சாக்கடையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
திறந்தவெளி சாக்கடையாக மாறிய பஸ் ஸ்டாண்ட் கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
ADDED : ஜூன் 16, 2024 11:37 PM
உடுமலை;உடுமலை, மத்திய பஸ் ஸ்டாண்டில், சாக்கடைக்கழிவுகள் தேங்கியும், கடைகளிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும், கோவை, மதுரை, திண்டுக்கல், சேலம் என பல்வேறு மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.
பயணியருக்கு தேவையான, குடிநீர், கழிப்பிடம், இருக்கை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
கோவை, மூணாறு, திருப்பூர் பஸ்கள் செல்லும் பயணியர் காத்திருக்கும் பகுதி, குப்பை தேங்கியும், எச்சில், திறந்த வெளி கழிப்பிடம் என நாறி வருகிறது.
இந்நிலையில், நகராட்சி வணிக வளாகத்திலுள்ள, உணவகம், ஓட்டல், பேக்கரிகளிலிருந்து, திறந்த வெளியில் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
அதிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், அதிகளவு உணவு மற்றும் மனித கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் திறந்து விடப்படுகிறது.
இதனால், பஸ்கள் நிற்கும் பகுதி நாறி வருவதோடு, பஸ் ஸ்டாண்டிற்குள் கழிவுகளை கடந்து, மக்கள் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
நகராட்சியில், ஏறத்தாழ, 16 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கிய நகராட்சி அதிகாரிகள், நகராட்சி வணிக வளாகத்திற்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காததால், திறந்த வெளி கழிவு நீர் வெளியேற்றும் கால்வாயாக பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பஸ் ஸ்டாண்டில், பழநி, கோவை பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் நிற்கும் பகுதி உட்பட, போதிய கழிப்பிட வசதி இல்லாததால், பெரும்பாலான இடங்கள் திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டு, கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து வரும் பயணியரை, துர்நாற்றமே வரவேற்கிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் போதிய கழிப்பிடம் கட்டவும், கடைகளிலிருந்து கழிவுகளை திறந்து வெளியில் விடுவதை தடுக்கவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.