/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார் துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜூலை 20, 2024 10:52 PM
திருப்பூர்;-நகராட்சி பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் குறித்து காங்கயம் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காங்கயம் நகராட்சி மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் கனிராஜ், துணைத் தலைவர் கமலவேணி முன்னிலை வைத்தனர். இதில் குடிநீர் குழாய்கள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்; ரோடுகள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மொத்தம் 87 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது. துாய்மைப் பணியாளர்கள் மிகவும் மெத்தனமாக பணியாற்றுகின்றனர்; அலுவலர்கள் உரிய கண்காணிப்பு மேற்கொண்டும், துாய்மைப்பணிகள் குறித்த பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.நகரராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது. வளர்ப்பு பிராணிகள், கால்நடைகள், குழந்தைகளை அவை துரத்திச் சென்று கடிக்கிறது. உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய் பெருக்கத்தை கட்டுப்டுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இப்பிரச்னைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.