ADDED : ஜூலை 18, 2024 11:00 PM

அவிநாசி;தெக்கலுாரில் வசிப்பவர் வண்ணமயில், 72. இவர் தனது மருமகள் சுஜாதாவின் ஏ.டி.எம்., கார்டில் இருந்து பணம் எடுக்க, கடந்த 4ம் தேதி இரவு தெக்கலுாரிலுள்ள ஏ.டி.எம்., சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த தேனி - போடியை சேர்ந்த தம்பிராஜ், 44, என்பவர் உதவுவது போல கார்டை வாங்கி 'ரகசிய எண்மு' தெரிந்து கொண்டு, 90 ஆயிரம் ரூபாயை 'அபேஸ்' செய்தார். விசாரித்த அவிநாசி போலீசார் தம்பிராஜை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் கோவை சிறையில் அடைத்தனர்.