/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்களால் அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்களால் அச்சுறுத்தல்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்களால் அச்சுறுத்தல்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்களால் அச்சுறுத்தல்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாய்களால் அச்சுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2024 11:05 PM
திருப்பூர்:கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களால், மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம், 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளை உள்ளடக்கி இயங்குகிறது. பொதுமக்கள் ஏராளமானோர், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கலெக்டர் அலுவலக நுழைவாயில், குறைகேட்பு கூட்ட அரங்க போர்டிகோ பகுதியில், ஐந்து நாய்கள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன.
இவைதவிர, 10க்கும் மேற்பட்ட நாய்கள், கலெக்டர் அலுவலக, எஸ்.பி., அலுவலகம் உள்வட வளாகம் முழுவதும் சுற்றித்திரிந்துகொண்டிருக்கின்றன.
நாய்கள் தங்களுக்குள் திடீரென சண்டையிடுவது, கூட்டமாக சேர்ந்து அணிவகுத்துச் செல்வது, தனியே செல்வோரை துரத்துவது, மக்களை பீதியடையச் செய்கிறது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தினமும் காலை, வாக்கிங் செல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரிந்த ராட்வீலர் நாய், நேற்றுமுன்தினம், நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒருவரை கடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாய் கடித்து காயமடைந்தவரை, பொதுமக்கள் மீண்டும், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ராட்வீலர் நாய், விருந்தினர் மாளிகை அருகே கட்டி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவேண்டும். தடை செய்யப்பட்ட ராட்வீலர் நாயை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் விட்டுச்சென்றவர் யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.