/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து
கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து
கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து
கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து

'சென்டம்' எளிதல்ல!
கணித ஆசிரியர் ராஜேஸ்வரி: ஒரு மதிப்பெண்ணில், 16 கேள்விகள் புத்தகத்தில் இருந்து, நான்கு உள்ளே இருந்து கேட்டிருந்தனர். இரு மதிப்பெண்ணில், புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் எளிதாக அணுகியிருக்க முடியும். பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தவர்களுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டு இருக்கும். மூன்று மதிப்பெண்ணில், எளிதாக கேட்டிருந்தனர். ஐந்து மதிப்பெண்ணிலும், எதிர்பார்த்தவை வந்திருந்தது. இம்முறை மாணவ, மாணவியர் எளிதாக சென்டம் வாங்க முடியாது. அனைத்து பாடங்களையும் தரவாக படித்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு.
5 மார்க் வினா கடினம்
வணிகவியல் ஆசிரியர் கவுசல்யா: ஐந்து மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தது வரவில்லை. கொஞ்சம் கடினமாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவ, மாணவியருக்கு சிரமமாக தான் இருந்து இருக்கும். இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் கேட்ட வினாக்கள் வரவில்லை. ஒன்று, இரண்டுமற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. இம்முறை வணிகவியலில் சென்டம் குறைய வாய்ப்புள்ளது.