/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விவசாயிகள் நினைவு ஸ்துாபிக்கு மலரஞ்சலி கட்சியினர், அமைப்பினர் திரண்டனர் விவசாயிகள் நினைவு ஸ்துாபிக்கு மலரஞ்சலி கட்சியினர், அமைப்பினர் திரண்டனர்
விவசாயிகள் நினைவு ஸ்துாபிக்கு மலரஞ்சலி கட்சியினர், அமைப்பினர் திரண்டனர்
விவசாயிகள் நினைவு ஸ்துாபிக்கு மலரஞ்சலி கட்சியினர், அமைப்பினர் திரண்டனர்
விவசாயிகள் நினைவு ஸ்துாபிக்கு மலரஞ்சலி கட்சியினர், அமைப்பினர் திரண்டனர்
ADDED : ஜூன் 20, 2024 05:18 AM

அனுப்பர்பாளையம், : விவசாய பயன்பாட்டுக்கான மின் கட்டண உயர்வை கண்டித்து, 1970 ஜூன் 19ம் தேதி பெருமாநல்லுாரில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கட்டுப் படுத்த, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினம் நேற்று நினைவிடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. நினைவு ஸ்துாபிக்கு இறந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர், விவசாய அமைப்பினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், இந்திய கம்யூ., சார்பில், எம்.பி., சுப்பராயன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் ரவிக் குமார், அகில இந்திய விவசாய சங்க துணை தலைவர் கருப்பசாமி, இந்து மக்கள் இயக்கம் பூபாலு,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்புசாமி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி எம்.பி., மகேஸ்வரன்,
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார், உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து, பா.ஜ., மாநில நிர்வாகி சின்னசாமி,
அத்திகடவு - அவிநாசி திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார், ஏர் முனை இளைஞர் அணி கொண்டசாமி,
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ஈஸ்வரன், அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்க தலைவர் மணி, விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஈசன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் தங்கள் நிர்வாகிகளுடன் பெருமாநல்லூர் நால் ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று நினைவு ஸ்துாபிக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.