/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்காச்சோளம் உற்பத்தி; ரூ.16.81 லட்சம் மானியம் மக்காச்சோளம் உற்பத்தி; ரூ.16.81 லட்சம் மானியம்
மக்காச்சோளம் உற்பத்தி; ரூ.16.81 லட்சம் மானியம்
மக்காச்சோளம் உற்பத்தி; ரூ.16.81 லட்சம் மானியம்
மக்காச்சோளம் உற்பத்தி; ரூ.16.81 லட்சம் மானியம்
ADDED : ஜூன் 12, 2024 10:43 PM
திருப்பூர் : திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு, 21,020 எக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை பரப்ப, அரசு ஊக்குவிக்கிறது. 2024- 2025ம் ஆண்டுக்கு, 16.81 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்கள் அடங்கிய மக்காசோள செயல் விளக்கத்திடல் அமைக்க, எக்டருக்கு, 6,000 ரூபாய் மதிப்பில் மானியம் வழங்கப்படுகிறது. மக்காச்சோளத்தில் பயறு வகை பயிர்கள், ஊடுபயிர் செயல் விளக்கத்திடல் அமைக்க, எக்டருக்கு, 6,000 ரூபாய் மானியம்; வீரிய ஒட்டு ரக விதைக்கு, கிலோவுக்கு, 100 ரூபாய் அல்லது, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
உயிர் உர வினியோகத்திற்கு, எக்டருக்கு, 300 ரூபாய் அல்லது, 50 சதவீதம்; பயறு நுண்ணுாட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து வினியோகத்திற்கு, எக்டருக்கு, 500 ரூபாய் அல்லது, 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
தானிய உற்பத்தி குறித்த மேலும் விபரங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் மானிய உதவி பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம்.