/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறைவழுத்த மின்சாரம்; விவசாயிகள் கண்ணீர் குறைவழுத்த மின்சாரம்; விவசாயிகள் கண்ணீர்
குறைவழுத்த மின்சாரம்; விவசாயிகள் கண்ணீர்
குறைவழுத்த மின்சாரம்; விவசாயிகள் கண்ணீர்
குறைவழுத்த மின்சாரம்; விவசாயிகள் கண்ணீர்
ADDED : ஜூன் 27, 2024 11:00 PM
பொங்கலுார் :
பொங்கலுார், ராமலிங்கபுரம், ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி குறைவழுத்த மின்சாரம் வருகிறது. இதனால், பகல் நேரங்களில் மின் மோட்டார்களை இயக்க முடிவதில்லை. அடிக்கடி மின் மோட்டார்கள் பழுதாகிறது. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'அருகிலுள்ள குவாரி இயங்கினால் விவசாயிகளுக்கு குறைவழுத்த மின்சாரம் தான் கிடைக்கிறது. தேவையான மின்சாரத்தை வழங்காமல் விவசாயிகளை மின்வாரியம் வஞ்சிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் சீரான மின்சாரம் கிடைக்கிறது. அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் மெத்தனம் காட்டுகின்றனர்,' என்று குற்றம்சாட்டினர்.
பெருந்தொழுவு உதவி மின் செயற்பொறியாளர் பிரபு கூறுகையில், ''காற்று பலமாக வீசுவதாலும், விவசாயிகள் ஒரே நேரத்தில் மின் மோட்டார்களை இயக்குவதாலும் காலை நேரத்தில் பிரச்னை உள்ளது. காற்று குறைந்தால் சீரான மின்சாரம் கிடைக்கும். குறைபாட்டை சரி செய்ய முயற்சித்து வருகிறோம்,'' என்றார்.