/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தாமரையா... இலையா... கதிர் அரிவாளா! வாகை சூடும் நம்பிக்கையுடன் வேட்பாளர்கள் தாமரையா... இலையா... கதிர் அரிவாளா! வாகை சூடும் நம்பிக்கையுடன் வேட்பாளர்கள்
தாமரையா... இலையா... கதிர் அரிவாளா! வாகை சூடும் நம்பிக்கையுடன் வேட்பாளர்கள்
தாமரையா... இலையா... கதிர் அரிவாளா! வாகை சூடும் நம்பிக்கையுடன் வேட்பாளர்கள்
தாமரையா... இலையா... கதிர் அரிவாளா! வாகை சூடும் நம்பிக்கையுடன் வேட்பாளர்கள்
பாரதிய ஜனதா
பா.ஜ.,வினர் கூறுகையில், ''பிரசார துவக்கத்தில் இருந்து பா.ஜ., வேட்பாளர் அந்தியூர், கோபி, பவானி, பெருந்துறை போன்ற பகுதிகளில் சூறாவாளியாக பிரசாரம் செய்தார். கிராம பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை தெரியப்படுத்தியும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு பிரத்யேகமான வாக்குறுதி இடம்பெற்றுள்ள பிரதியை வெளியிட்டும் ஓட்டு சேகரித்தார். திருப்பூர் மாநகரிலும் முனைப்புடன் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.
இந்திய கம்யூ.,
திருப்பூர் லோக்சபா தொகுதியில் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டுமே தி.மு.க., வசம் இருந்தது. கூட்டணிக்கட்சியான இந்திய கம்யூ., போட்டியிட்டாலும், தலைமையின் உத்தரவு காரணமாக, தி.மு.க.,வினர் வெற்றிக்காக முனைப்புடன் பாடுபட்டனர். உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., வின் ஆதிக்கம் இருந்த நிலையில், கட்சியினரால் எளிதாக வாக்காளர்களை அணுகி ஓட்டு சேகரிக்க ஏதுவாக அமைந்தது.இந்திய கம்யூ.,வைப் பொறுத்தவரை தொழிற்சங்கத்தினர் ஆர்வமாக களம் இறங்கிப் பணியாற்றினர்.
அ.தி.மு.க.,
இரண்டு முறை வென்ற திருப்பூர் தொகுதியை, இத்தேர்தலில் மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என, அ.தி.மு.க., கங்கணம் கட்டி களமிறங்கியது. 'சிட்டிங்' எம்.பி., யின் செயல்பாடுகள்; தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க., வின் திட்டங்கள், பனியன் தொழிலில் ஏற்பட்ட சறுக்கல் என, சட்டசபை தொகுதி வாரியாக, பிரச்னையை எடுத்துரைத்து பிரசாரம் நடந்தது.