Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கள்ளுக்கு தடை நீங்கட்டும்'

'கள்ளுக்கு தடை நீங்கட்டும்'

'கள்ளுக்கு தடை நீங்கட்டும்'

'கள்ளுக்கு தடை நீங்கட்டும்'

ADDED : ஜூன் 30, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
அவிநாசி;கள்ளக்குறிச்சியில், விஷச்சாராயம் அருந்தி, 65 பேர் உயிரிழந்தனர். இது விஷயத்தில், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசை கண்டித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி, அவிநாசி அத்திக்கடவு போராட்ட குழு, களஞ்சியம் விவசாயிகள் சங்கம், கிராமிய மக்கள் இயக்கம் ஆகியன சார்பில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். களஞ்சியம் விவசாயிகள் சங்க தலைவர் சுப்ரமணியம், கிராமிய மக்கள் இயக்க தலைவர் சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒன்றிய தலைவர் வேலுசாமி, ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ் உட்பட பலர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர், கள்ளச்சாராயத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும், கள்ளுக்கான தடையை விலக்க வேண்டும். ஆகியன குறித்து கோஷம் எழுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us