/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பயறு வகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும்! சாகுபடி தொழில் நுட்பங்கள் விளக்கம் பயறு வகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும்! சாகுபடி தொழில் நுட்பங்கள் விளக்கம்
பயறு வகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும்! சாகுபடி தொழில் நுட்பங்கள் விளக்கம்
பயறு வகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும்! சாகுபடி தொழில் நுட்பங்கள் விளக்கம்
பயறு வகை பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும்! சாகுபடி தொழில் நுட்பங்கள் விளக்கம்
ADDED : ஜூலை 27, 2024 02:28 AM

உடுமலை;உடுமலை வேளாண் துறை சார்பில், பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் சொட்டு நீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
உடுமலை வட்டாரம், எரிசனம்பட்டி ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், கிராம விவசாயிகள் முன்னேற்றக்குழு அமைப்பு மற்றும் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கான பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் சொட்டுநீர்ப்பாசனம் குறித்த கூட்டம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குநர் தேவி தலைமை வகித்து பேசுகையில், ''அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் துறை சார்பில், தரிசு நிலங்களை பண்படுத்தி, சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்ற மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வரப்பு ஓரங்களில் பயறு வகை சாகுபடி மேற்கொள்ள மானியம், மண்ணுயிர் காப்போம் திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமாசாலினி, செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கான பயறு மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்களில் சொட்டு நீர்ப்பாசன மானிய குறித்தும் விளக்கினார்.
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தவப்பிரகாஷ் பேசியதாவது:
சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீரை திருப்பி அனுப்பாத வால்வு, வடிகட்டி, அழுத்த மானிகள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், சொட்டுநீர் பாசன அமைப்பில் எந்த குறைபாடும் ஏற்படாது. வடிகட்டிகளை தினசரி சுத்தம் செய்தால், அடைப்பு ஏற்படாமல், 15 ஆண்டுகள் நன்கு செயல்படும்.
தென்னை சாகுபடியில், சொட்டுநீர்ப் பாசனம் வாயிலாக உரப்பாசனம் செய்யும் பொழுது, டி.ஏ.பி., உரத்தை ஒரு நாள் ஊற வைத்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும்.
பயறு வகைப் பயிர்களில், 2 கிலோ, மியூரேட் ஆப் பொட்டாஷ் உரத்தை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு மணி நேரத்திற்கு பின் வடிகட்டி, 200 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள பயறு வகைப் பயிர்களுக்கு 20-- 30 நாட்களில், பேட்டரி தெளிப்பான் வாயிலாக தெளித்தால், 10 முதல், 15 நாட்கள் வறட்சியை தாங்கி வளரும்.
இவ்வாறு பேசினார்.
உதவி வேளாண்மை அலுவலர், மார்க்கண்டன், உயிர் உரங்கள் மற்றும் உளுந்து, சோளம், கம்பு செயல் விளக்கத்திடல், தொழில் நுட்பங்கள் மற்றும் மக்காச்சோளம், நுண்ணுாட்டங்கள் குறித்து விளக்கினார்.
உதவி தொழில் நுட்ப மேலாளர் மனோஜ்குமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.