ADDED : ஜூலை 09, 2024 10:49 PM
திருப்பூர்;மத்திய அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டங்களில் சில திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது. இவற்றை திரும்ப பெற வலியுறுத்தி, 12ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன் நேற்று வக்கீல்கள் இதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல் சங்க தலைவர் சுப்புராஜ், அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் பூபேஷ், பார் அசோசியேசன் செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் உள்ளிட்ட திரளான வக்கீல்கள் பங்கேற்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற கோஷமிட்டனர்.